”அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தொடர்ந்தும் பலப்படுத்தும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது அதனாலேயே கட்சியை நாம் மீளபொறுப்பேற்றோம். அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்தவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் இன்று ஒருரிரு உறுப்பினர்களே உள்ளனர்.சந்திரிக்கான பண்டார நாயக்கவின் வழிகாட்டலில் மீண்டும் இந்த கட்சியை நாம் கட்டியெழுப்புவோம்” இவ்வாறு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.