ஜனாதிபதி வேட்பாளருக்கான பிணை வைப்பு கட்டணம் 26 இலட்சம்

Date:

தேர்தல்களுக்கான பிணை வைப்பு கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி, தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு பிணை வைப்பு கட்டணத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட பிணை வைப்பு கட்டண திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்சி ஒன்றிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை 26 இலட்சமாகவும், சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளருக்கு 31 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 16,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 6,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...