புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைத்து புதிய விலை 850 ரூபாவாகும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெள்ளை பூண்டு 15 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 680 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...