ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக தொடர்ந்து 48 மணித்தியால போராட்டம்

0
281

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்துக்கும் எதிராக இன்று காலை முதல் பெரும் திரளான மக்கள் காலி முகத்திடலில் திரண்டுள்ளனர்.

இந்த போராட்டம் 48 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என மக்கள் மேலும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆட்சியில் நீடிப்பதற்கு தங்களுக்கு உரிமை இல்லை என்றும் பெரும்பான்மையினரின் குரலுக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பொதுப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொள்வதாகத் தெரிகிறது.

கலைஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் உட்பட பலர் இன்று காலி முகத்திடலில் பொதுப் போராட்டத்துடன் கூடியிருப்பதைக் காணமுடிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here