ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் தேர்தல்களில் அமைக்கப்படும் புதிய கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியாகவே இருக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் இந்தக் கூட்டணியில் இணையலாம். ஐக்கிய தேசியக் கட்சியானது கூட்டணியில் ஒரு சிறிய கட்சியாக இணைய முடியும். ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது ஒரு சிறிய கட்சியாகும். ஏனெனில் அக்கட்சிக்கு உள்ள வாக்கு சதவீதம் மிகக்குறைவாகும்.
எமது பாரிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருப்பார்” – எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
N.S