எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்கத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடினார். இது குறித்து சஜித் கூறியதாவது,
“இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவருடன் பயனுள்ள கலந்துரையாடலொன்றை மேற்கொண்டேன். இலங்கையின் தொழிற்துறைகளுக்கு ஒத்துழைப்பை நல்கும் புதிய வாய்ப்புகளை திறக்கும் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் உண்மையான பலன்களை கொண்டு வரும் நியாயமான, முன்னோக்கிய கூட்டாண்மையின் அவசியத்தை இங்கு நான் வலியுறுத்தினேன்“ என்று சஜித் தெரிவித்துள்ளார்.