திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து தற்போதைய அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதாக முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டக்கூடிய எந்தவொரு குழுவையும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு ஜனாதிபதி ஜனநாயக ரீதியில் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அந்த சவாலை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கொடுக்கும்போது அதனைச் செய்ய முடியாது என்பதாலேயே ஏற்றுக் கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.