ஆளும் கட்சியில் இருந்து வெளியேறும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவின் பிரேரணையின் பிரகாரம் நேற்று (09) வரை பிரதமர் பதவியை ஏற்க டலஸ் அழகப்பெரும விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், இன்று அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிய கட்சி கூட்டமைப்பினரின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவினர் இன்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்திக்க உள்ளனர்.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.