அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று (10) கைச்சாத்திடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் இடம்பெற்றதுடன் கையொப்பங்களும் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் 20வது திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய சஜித் தலைமையில் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.