போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் மகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து பயன்படுத்திய கணினி, பிரிண்டர் மற்றும் பிற உபகரணங்களை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு இந்த போலி ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரும் மற்றுமொருவரும் கட்டுவன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் எண்பத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.