ராஜித நாட்டின் பிரதமராக நியமிக்கப்படப் போவதாக பரவும் தகவல்!

0
150

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என பல இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் அமைச்சராக நியமிக்கப்படமாட்டார் என்றும், பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் சில இணையங்கள் செய்தி வெளியிட்டன.

அவருடன் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுவும் ஆட்சியில் சேரும் என்றும் கூறுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி பல பகுதிகளாக பிரிந்து நிரந்தரமாக வெடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், ராஜித சேனாரத்ன பிரதமர் பதவியை ஏற்கத் தயாரா என அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் வினவியபோது, ​​அவ்வாறானதொரு ஏற்பாடுகள் தொடர்பில் தமக்குத் தெரியாது என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here