தற்போதைய கடனை அடைத்து வெளிநாடுகளுக்கு கடன் வழங்கக்கூடிய நாடாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
“கடன் வாங்கும் போது, அந்த கடனை சரியாக பயன்படுத்தினால், கடனில்லா நாடாக மாற்றலாம். எனவேதான் அவருக்கு நீண்ட கால அவகாசம் வழங்கினால் இந்த நாட்டின் கடனை அடைத்து கடன் கொடுக்கும் நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு தேசிய தலைமை உள்ளது. அந்தத் தேசியத் தலைமையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு முன்னேற வேண்டும். எந்த அமைப்பையும் கைவிடாமல் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இதுவே இலங்கையின் கடைசி வாய்ப்பு. நல்ல வேளையாக, சர்வதேச விவகாரங்களைக் கையாளக்கூடிய ஒரு தலைவர் இலங்கையில் இருந்தார். அவரால் தேசம் பயன்பெற வேண்டும்” என்றார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.