காலியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

Date:

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடல்ல பகுதியில் நேற்று (ஏப்ரல் 15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 36 வயதுடையவர் மற்றும் காயமடைந்தவர் 18 வயதுடையவர். இவர் தடல்ல பகுதியைச் சேர்ந்தவர்.

தடல்லா பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, இரவு நேரத்தில் நடைபெற்ற டி.ஜே. இசை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு வந்துள்ளதாகவும், உயிரிழந்த சந்தேகநபர்களுக்கு இடையில் சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் உறவினர் என்பதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...