ஐக்கிய மக்கள் சக்தியும் மற்றும் தாங்களும் அமைச்சர் பதவிகளைப் பகிர்வது போன்ற வரப்பிரசாதம் மற்றும் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் ஒன்றிணைவதற்குத் தயாராகி வருகிறோம் என்ற சமீபத்திய செய்தியை அரசாங்க சார்பு குழுக்கள் உருவாக்கி விளம்பரப்படுத்தியுள்ளன. இந்தப் போலிச் செய்தியை நாங்கள் முற்றாக நிராகரிப்பதுடன், அந்தச் செய்திக்கு உரிய மறுப்புத் தன்மையுடன் அதைக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் கூறுகையில்,
இதுவரை இருந்து வந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நீட்சியாகவே பதவியில் இருக்கும் அரசாங்கம் காணப்படுகிறது. முன்னைய அரசாங்கம் இந்த நாட்டைத் தள்ளிய பாதாளத்தை விட மோசமான பாதாளத்திற்கு எமது நாட்டைத் தள்ளுவதாகவும், விரைவில் இந்த அரசாங்கத்தின் அப்பட்டமானம் நாடகங்கள் தோற்றுப் போகும் எனவும் ஆரம்பத்திலேயே எச்சரித்தோம். அது சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தப்படும்.
▪ SLPP யின் நிழல் அரசாங்கமாக மாறிவரும் அரசாங்கம், அதன் தோல்வியுற்ற அதிகார நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் முயற்சியில் ஆதாரமற்ற தவறான தகவல்களை பரப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. கூட்டு முதலாளித்துவ கும்பலுக்கும் பிற்போக்கு சக்திகளுக்கும் ஒரே சவாலாக ஐக்கிய மக்கள் சக்தி மாறியுள்ளது. மேலும் அந்த கும்பல் ஐக்கிய மக்கள் சக்தியை சேதப்படுத்துவதற்கும், களங்கப்படுத்துவதற்கும் எந்த விலையையும் கொடுக்க யோசிக்காது.
▪ ஐக்கிய மக்கள் சக்தியின் அணி அரசாங்கத்தில் இணையப் போகிறது என்ற போலிச் செய்தியில் தொடங்கி தொடர்ந்து பொய்ச் செய்திகளை வெளியிட்ட அந்தக் கும்பல், இப்போது, ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடப்போவதாகப் பொய்ச் செய்திகளைப் பரப்பும் சமீபத்திய உத்தியை கையாண்டுள்ளனர். பிரதமர் மற்றும் பிற அமைச்சர் பதவிகளுக்கு அரசாங்கத்தில் சேர்வதாக வதந்திகள் பரவுகின்றன.
▪ அந்த கும்பலுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே உள்ள முக்கியமான பிளவு கோடு என்னவென்றால், அவர்கள் பேரங்கள் மற்றும் சிதைவுகளின் அரசியலை நம்புகிறார்கள், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் உண்மையை நம்புகிறோம். இந்த துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து நம் நாட்டைக் காப்பாற்ற ஒரு தேர்தலைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த நாட்டில் இயங்கி வரும் நாகரீக ஊடகங்களில் இருந்து பாடம் கற்கவும், தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்யும் அளவுக்கு ஊடகங்களை வலிநடத்தும் சில ஊடக நிறுவனங்களுக்கு அவ்வாறு செய்ய வேண்டாம் என வலியுறுத்த வேண்டும்.
▪ சிறிய நிதி ஆதாயங்களுக்காக எந்தவொரு கட்டுக்கதையையும் சமூகமயமாக்குவதற்குப் பதிலாக, புத்திசாலித்தனமாகவும் நெறிமுறையுடனும் ஊடகங்களைப் பயன்படுத்துமாறு அவர்களுக்கு நாங்கள் பரிந்துரைக்க விரும்புகிறோம்.
▪ ஆனால் அவர்களின் எஜமானரின் கருத்தை பிரபலப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் அனுதாபம் காட்டுகிறோம். ஒன்றை வலியுறுத்த விரும்புகிறோம். அதாவது, மக்கள் உண்மையை மாற்ற முடியாது என்றாலும், உண்மை மக்களை மாற்றும்.
▪ இந்த நாட்டில் உள்ள அப்பாவிகள் மற்றும் ஆதரவற்ற மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் காலத்தின் ஒவ்வொரு நொடியின் அவசரத்தையும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம், மேலும் இந்த தன்னிச்சையான மற்றும் இடைவிடாத அரசாங்கத்தின் ஒப்பந்த அரசியலில் ஈடுபடுவதற்கு எங்கள் மிகுந்த வெறுப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். சதி மற்றும் வேட்டையாடுதலுக்கு பதிலாக நாட்டில் பொது வாழ்க்கையை உயர்த்துவதற்கு நேரத்தை செலவிட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.