இன்று (16) காலை நிலவரப்படி சுமார் 10 பொலிஸ் லொறிகள் காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தன.
மக்கள் போராட்டத்தை கலைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நாம் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஏராளமான பொலீஸ் லொறிகளை வரவழைத்தது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, சம்பவ இடத்தில் இருந்து லொறிகளை அகற்ற பொலீஸார் நடவடிக்கை எடுத்தது தெரிந்தது.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அறிக்கையொன்றை வெளியிட்டு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அரசியலமைப்பு உரிமை உள்ளதால், காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெறும் அமைதிப் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.