கடந்த 24 மணிநேரத்தில் அதிவேக வீதி ஊடாக அரசுக்கு நான்கு கோடி ரூபா லாபம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல். டி. எஸ். வீரகோன் கூறினார்.
அந்த காலப்பகுதியில் 126,760 வாகனங்கள் அதிவேக வீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலையில் சராசரியாக 90,000 வாகனங்கள் ஓடுகின்றன. தெற்கு அதிவேக வீதி, கொழும்பு வெளிவட்ட வீதி, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக வீதிகளில் செலுத்தப்படும் வாகனங்கள் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளது.