டொரின்டன் அக்ரல்பெத்தை தாக்குதலில் நவராஜ், கண்ணா உள்ளிட்ட 18 பேர் கைது

0
158

அக்கரப்பத்தனை டொரின்டன் அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதலுடன் தொடர்புடைய 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.

காட்டுமாரியம்மன் கோவில் பூஜை குழு மற்றும் பிள்ளையார் கோவில் பூஜை குழு என இருவேறு தரப்பினர் அன்னதானம் மேற்கொண்ட விளைவாக தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் வெட்டுகாயத்திற்கு இலக்கான நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சிறுவர் ஒருவர் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

ஏனையோர் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்கள் என அறியப்படும் நவராஜ் மற்றும் கண்ணா உள்ளிட்ட 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here