ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உறுதியளிக்கும் 7 அம்ச அறிக்கையை தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் இன்று சமர்ப்பித்தது.
NPP பிரதிநிதிகள் இன்று காலை பொரளை பேராயர் இல்லத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து 7 அம்ச அறிக்கையை சமர்ப்பித்தனர்.
தாக்குதல்களில் உயிர் இழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி வழங்குவதற்காக, தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவது போன்ற முக்கிய விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உறுதிமொழியும் அதில் அடங்கியிருந்தது.
இந்நிகழ்வில் NPP உறுப்பினர்களான பேராசிரியர் கிரிஷாந்த அபேசிங்க, சட்டத்தரணி சுனில் வட்டகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ரொஹான் பெர்னாண்டோ மற்றும் அருண சாந்த நோனிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.