தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் – யாழ். நல்லூரில் திலீபனின் தூபிக்கு முன்பாக நிகழ்வு

Date:

தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாகக் கொட்டகை அமைத்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று நடைபெற்று வருகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...