பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (19) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நீண்ட கால அரசியல் வரலாறு உடைய அமைப்பு. இந்த நாட்டில் பெருந்தோட்ட துறையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் உள்ளனர். இந்த மக்களுக்கு நாங்கள் கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பளத்தை பெற்றுக்கொடுத்து இருந்தோம்.
இந்த நாட்டில் உண்மையாக இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிகளுக்கு 1,700 அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும்.
ஆனால் அதை முதலாளி சம்மேளனம் வழங்க மறுக்கிறது. எனவேதான் அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளோம். எதிர்வரும் 24ம் திகதி சம்பள சபை கூட்டத்தில் கலந்து கொண்டு 1700 ரூபா சம்பளம் வழங்க அவர்கள் இணங்க வேண்டும். இல்லாவிட்டால் முழு மலையகமும் ஸ்தம்பிதமடையும் என்றார்.