பரகும்புர மற்றும் அம்பேவெல இடையே ரயில் சோதனையின் போது ரயில் மோதி ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று வாகனம் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தியத்தலாவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மன்னார், சிறிநாவக்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்து 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயிலில் ஏறும் போது அவர் இந்த விபத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.