துப்பாக்கிச்சூடு நடாத்த கட்டளையிட்டவர் நிலவும்!

0
102

ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு கேகாலை பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி கீர்த்திக்கு போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் திலும் அமுனுகம அனுமதியை வழங்கியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர் என்றும், காலை முதல் போதையில் இருந்ததாகவும் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனையில் இருந்து பிரதான புகையிரத பாதையை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன, போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிரச்சனைகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், ரயில் பாதையை தனது சொந்த வழியில் திறக்கலாம் என்று அமைச்சரிடம் எஸ்.எஸ்.பி கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here