இலங்கையில் வெப்ப நிலை தொடர்ந்தும் அதிகரிப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை!

0
318

இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால், வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

எட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த புதன்கிழமை முதல் விடுத்துள்ளது.

இந்நிலையில் மத்திய மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 37 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இந்த வெப்ப நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது. அதிக வெப்பமான நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், லேசான ஆடைகளை அணியவும், அதிகமாக திரவங்களை குடிக்கவும் மக்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள உயர் அழுத்தத்தின் விளைவாக இலங்கை மற்றும் தெற்காசியாவின் பிற பகுதிகளில் இவ்வாறு வெப்ப நிலை அதிகரித்து வருகிறது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here