”இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. யார் அந்தச் சின்னத்துக்குரிய வேட்பாளர் என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு தமிழ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி.
”அப்படியாயின், ரணில் விக்கிரமசிங்க மொட்டுச் சின்னத்தில் – பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் எனக் கூறுகின்றீர்களா?” எனக் கேட்டதற்கு,
”எமது கட்சி முன்நிறுத்தப் பரிசீலிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அவரோ அல்லது வேறு எவரோ ஒருவர் நிச்சயம் மொட்டுக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடுவார் என்பது உறுதி. எமது கட்சி நிச்சயம் களமிறங்கும். ஆனால் வேட்பாளர் யார் என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும். கட்சி உரிய சமயத்தில் அதைத் தீர்மானித்து அறிவிக்கும்.” – என்றார் நாமல் ராஜபக்ஷ எம்.பி.