முதலில் ஜனாதிபதித் தேர்தல – ரணில் உறுதி என்கிறார் வியாழேந்திரன்

0
54

இலங்கையில் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும், இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் இலங்கையில் உள்ள சகல சிறுபான்மையின மக்களும் ஒருவரை ஏகமனதாகத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவது தற்போதைய நிலைமையில் சாத்தியம் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here