தென் மாகாண ஆளுநர் பதவி விலகல்! புதிய ஆளுநர் போட்டியில் இருவர்

0
217

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே அந்தப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இந்த ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதவியை விட்டு வெளியேறியதன் பின்னர் பாதுகாப்பாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வடமேற்கு ஆளுநராக கடமையாற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் வெற்றிடம் ஏற்படும் வடமேல் மாகாணத்தின் ஆளுநராக மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி அல்லது முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here