Monday, May 6, 2024

Latest Posts

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்

ஆட்கடத்தல் குழுவொன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்து ஆட்சேர்ப்பு செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு இன்று (24) நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில்,

ரஷ்ய போரில் நமது வீரர்கள் பலர் பயன்படுத்தப்படுகின்றார்கள். குசாந்த குண சின்ஹா ​​என்ற நபர் பலரை அழைத்துச் சென்று ரஷ்ய இராணுவத்தில் இணைத்துள்ளார். இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது குஷாந்த குணசிங்கவை காணவில்லை. இந்தியாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் இந்த ஆட்கடத்தலை செய்து வருகின்றார். இவரிடமிருந்து பதினெட்டு இலட்சத்தை பெற்று இராணுவ வீரர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைந்துள்ளனர்.

இலங்கை மக்கள் இரு தரப்பினராக பிரிந்து தற்போது சண்டையிட்டு வருகின்றனர். எத்தனை பேர் இதுவரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாது. இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்

இது முற்றிலும் சட்டவிரோதமானது. நாட்டில் வருமானம் இல்லாத காரணத்தினால் நமது இராணுவத்தில் உள்ளவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்றும் கேள்வி எழுப்புகின்றேன். இந்த மக்கள் பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.