அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை வெற்றி

0
237

அமெரிக்கா விதித்துள்ள வரிகள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவில் திடீரென்று ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இது நமது ஏற்றுமதித் துறைகள் பலவற்றை, குறிப்பாக ஆடைகளை பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதைத் தீர்க்க நாங்கள் முயற்சிக்கிறோம். நிதித் துணை அமைச்சர் உட்பட எங்கள் குழு அமெரிக்காவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. இப்போது, ​​பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு தரப்பினரும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட உள்ளனர். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”

இரத்தினபுரி பகுதியில் நேற்று (23) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here