பங்களாதேஷ் வளரும் நாடாக பட்டம் பெறத் தயாராகி வரும் நிலையில் அதன் வர்த்தக அமைச்சர் திப்பு முன்ஷி, இந்தியாவுடன் மட்டுமல்லாமல் இந்தோனேசியா மற்றும் இலங்கையுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) அல்லது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) செய்ய ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் .
“நாங்கள் CEPA உடன்படிக்கையை அடுத்த ஒரு வருடத்திற்குள் எங்கள் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளி நாடாக உள்ள இந்தியாவுடன் மட்டுமல்லாமல் இலங்கை மற்றும் இந்தோனேஷியா போன்ற பிற நாடுகளுடன் அமைக்க விரும்புகிறோம்” என்று முன்ஷி கூறினார்.