அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நாட்டின் ஆட்சியாளர்கள் வீதிகளில் இல்லாது பதுங்குக் குழிகளில் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கும் சஜித், நாட்டை முன்னேற விடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.