தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் எழவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
“தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த அரசாங்கத்தாலும் மிகச் சிறந்த திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். அந்த சம்பவங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.”
நேற்று (ஏப்ரல் 24) அனுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.