வடமேற்கு மாகாண ஆளுநர், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரச திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
வசந்த கர்ணகொட மற்றும் அவரது மனைவி அசோகா கர்ணகொட ஆகிய இருவரும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.