வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிவலிங்கத்தை நிறுவ நீதிமன்றம் உத்தரவு!

Date:

வவுனியா வெடுக்கநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகளை உடன் மீண்டும் நிறுவ வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிலைகளை மீண்டும் ஆலய நிருவாகத்தினரிடம் கையளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு மன்று உத்தரவு இட்டுள்ளது.

நாளை முதல் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தொல்லியல் தரப்பினர் தடைகளை ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

ஆலய பரிபாலன சபை சார்பாக மன்றிலே ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆஜராகி செய்ய சமர்ப்பணங்களின் பிரகாரம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் கடந்த வழக்குத் தினத்திலே வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும், பூசைகளிற்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...