நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து இருப்பதை ஒப்பிட்டும் சமந்தாவுக்கு விமர்சனம்

0
313

நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். விவாகரத்துக்கு சமந்தாவே காரணம் என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா மறுத்ததாலேயே கணவர் பிரிந்தார் என்றும், தெலுங்கு இணைய தளங்களில் அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார். ஆனாலும் சமந்தாவுக்கு எதிரான பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தபோது, சமந்தா கலந்து கொள்ளாததை குறை கூறினர்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து இருப்பதை ஒப்பிட்டும் சமந்தாவை விமர்சித்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சமந்தா காட்டமாக புதிய பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் “என்னுடைய மவுனத்தை அறியாமை என்றும், எனது அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணையை பலவீனம் என்றும் நினைக்க வேண்டாம். கருணைக்கும் காலாவதி இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். கேலி, மீம்ஸ்களால் கோபப்பட்டே இந்த பதிவை சமந்தா வெளியிட்டு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here