சர்வகட்சி இடைக்கால அரசு அமைப்பதற்கு வெளியில் இருந்தாவது ஒத்துழைப்பு வழங்குமாறு முக்கியமான தேரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் வரை இடைக்கால அரசில் இணையத் தயாரில்லை என சஜித் பிரேமதாஸ ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
எனினும், புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசு அமைப்பதற்கு தெற்கு அரசியலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
முக்கியமான தேரர்கள் சிலர் இதன் பின்னணியில் செயற்படுகின்றனர். அவர்களே சஜித்தைச் சந்தித்து, அவரின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.