ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

0
156

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தை கண்காணிப்பதிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here