நாடு முழுவதும் உள்ள அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று பாரிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வி, போக்குவரத்து, நீர், துறைமுகம், மின்சாரம், தபால், வங்கி உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் 12 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டத்தை நடந்த திட்டமிட்டுள்ளனர்.