Sunday, October 6, 2024

Latest Posts

33% தகுதியற்ற குடும்பங்களும் சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொள்கின்றன!

தற்போது சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டிருக்கும் குடும்பங்களில் ஏறக்குறைய 33% குடும்பங்கள் திட்டத்தை பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள் என பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) தெரிவித்துள்ளது.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக COPA குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவைப் பெறுபவர்களில் 33 வீதமானவர்கள் அதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கும் அதேவேளை, கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் அதே வீதமானவர்களுக்கு சமுர்த்தி கிடைப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, மொத்தமாக 449,979 குடும்பங்கள் சமுர்த்தி மானியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டதாகவும் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தப்பட்டது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.