லிட்ரோ எரிவாயு நிறுவனம் தாய்லாந்தில் இருந்து ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் டன் LP எரிவாயுவை கொல்வனவு செய்ய ஆலோசித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது .
தாய்லாந்தில் இருந்து எரிவாயு வாங்கும் செலவு ஒரு மெட்ரிக் டன் க்கு 95 அமெரிக்கா டாலர் செலவாகும்எனவும் நிறுவனம் முன்பு ஓமான் லிருந்து ஒரு மெட்ரிக் டன்க்கு 105 அமெரிக்கா டாலர் செலவில் எரிவாயுவை வாங்கியது எனவும் தெரிவித்தது .
தாய்லாந்தில் இருந்து எரிவாயு வாங்குவதன் மூலம், ஒரு மெட்ரிக் டன்னுக்கு 10 அமெரிக்க டாலர் மேலதிக செலவை குறைக்கமுடியும் எனவும் தெரிவித்தார்
அதன்படி, தாய்லாந்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ள முதல் எரிவாயு சரக்கு அடுத்த மாதம் நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது .