ராஜபக்ஷக்கள் தனக்கு அஞ்சுவதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்

0
84

ராஜபக்ச குடும்பத்தினர் தன் மீது கடும் அச்சம் கொண்டுள்ளவர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணையத்தள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ராஜபக்சவினருக்கு இருந்து வந்த உடன்பாட்டின் பிரதிபலன் காரணமாக எனக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் எனக்கு பாதுகாப்பு அமைச்சு பொறுப்பு வழங்கப்படவில்லை.

தமது குடும்பத்தினரை தற்காத்துக்கொள்ள மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை கையளித்தார்.

ஊழல், மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எனக்கு மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கப்படும் என நம்புகிறேன். அப்படியான பொறுப்பு வழங்கப்பட்டால், ஊழல், மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here