ஐந்து நாடுகள் பங்கேற்கும் சிலப்பாட்ட போட்டி நாளை!

0
64

ஐந்து நாடுகள் பங்குபற்றும் உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் சிலம்பாட்ட போட்டி நாளை சனிக்கிழமை(04) யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வுக்கான ஊடக சந்திப்பு யாழ். ரில்கோ விடுதியில் இடம்பெற்றது.

இந்தியாவில் இருந்து வருகை தந்த உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் மற்றும் இலங்கை சிவலீமன் சங்கத்தின் தலைவரும் உலக சிவலீமன் சங்கத்தின் இலங்கைத் தலைவருமான யசோதரன் ஆகியோர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் உலக சிலம்பம் சங்கத்தின் இலங்கைப் பொறுப்பதிகாரி யும் போட்டி மதிப்பீட்டாளருமான கே.ராஜமணிகண்டன் உலக சிலம்பம் சங்கத்தைச் சேர்ந்த மலேசியா ஏ ஸ்ரிபன் இங்கிலாந்தைச் சேர்ந்த வல்லவை சோதிசிவம் செல்வராஜ் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆர் . ரவிச்சந்திரன் மற்றும் டுபாய் நாட்டைச் சேர்ந்த சு.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here