போராட்டத்தின் போது நாட்டின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் தனி வீடு எரிக்கப்பட்டதற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்கா 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். இளங்கசிங்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (03) மீண்டும் இடம்பெற்றபோது, சந்தேகநபரான ஸ்ரீ ரங்காவை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் ஐந்தாம் ஒழுங்கில் உள்ள தனியார் வீடு தாக்கப்படுவதற்கு முன்னர், அன்றைய தினம் மாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
அதற்கு இந்த சந்தேகநபரும் முன்னாள் எம்பி நியோமல் பெரேராவின் மகனும் தலைமை தாங்கினார்.
இந்த வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நியோமல் பெரேராவின் மகன் வெளிநாடு தப்பிச் சென்றார்.