விபத்தில் இருவர் பலி

Date:

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிம்புலாவல பிரதேசத்தில் இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசத்தில் வசிக்கும் 18 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிம்புலாவல பிரதேசத்தில் இருந்து நவரோஹல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் ஜயவர்தனபுர மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிப்பு

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும நிதி...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் sjb ஆட்சி

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற ஹம்பாந்தோட்டை மாநகர சபையில்...

காலி அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று (ஜூன் 23) அதிகாலை துப்பாக்கிச்...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...