ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கட்சியின் அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை கொண்டுவருவதற்கு தயாராகி வரும் நிலையில், கட்சிக்குள் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் பசில் ராஜபக்சவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டமை குறித்து அக்கட்சிக்குள் பல்வேறு கேள்வி எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மீண்டும் மக்கள் நம்பிக்கையை அழிக்கும் நடவடிக்கை இது உள்ளதாக சிலர் குற்றம் சுமத்துவதாகவும், ஒருசில சிரேஷ்ட எம்.பி.க்கள் கூட பசில் ராஜபக்சவுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
பசில் ராஜபக்சவின் தலையீட்டினால் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகியுள்ளதாகவும், தலைமை மாற்றம் ஏற்பட்டால் அது கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என கருத்துக்களை அவர்கள் கூறியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
N.S