வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டது.
அவர்களில் வவுனியா தெற்கு சபைக்கு இம்முறை போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளர் கசுன் சுமதிபாலவும் ஒருவர்.
கசுன் சுமதிபால கடந்த உள்ளூராட்சிமன்ற தேத்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார வவுனியா மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஐ.தே.கவில் இணைந்து கொள்வதக கசுன் சுமதிபால அறிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் பல முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் இன்று ஐதேகவுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமரத்ன சுமதிபாலவும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
N.S