ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

0
296

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு மனு ஒன்றை அனுப்பத் தயாராக உள்ளனர்.

அந்த மனுவில், நீதித்துறையை மதித்து அதன் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2026 மே 25 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு, மக்களை ஆர்ப்பாட்டங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ரோஹித அபேவர்தன, சாமர சம்பத் தசநாயக்க, கயந்த கருணாதிலக, இம்ரான் மஹ்ரூப், ரஞ்சித் மத்தும பண்டார, ஹேஷா விதானகே, ஹர்ஷண ராஜகருணா, நிசாம் காரியப்பர், ரவூப் ஹக்கீம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, எஸ்.எம். மரிக்கார், ரோஹண பண்டார, சுஜீவ சேனசிங்க மற்றும் திலிப் வெதஆரச்சி உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here