பல்கலை மாணவர்கள் அதிரடி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நள்ளிரவு ‘ஹொரு கோ கம’ என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை அண்மித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று மாலை அரசுக்கு எதிரான பேரணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
மேலும், நேற்று அதிகாலை முதல் நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த வீதிகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸாரால் அமைக்கப்பட்ட இரும்புக் கம்பிகளுடனான வீதித் தடைகளை பல்கலைக்கழக மாணவர்கள் உடைத்தெறிந்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நள்ளிரவு ‘ஹொரு கோ கம’ என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.