கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று ரூபா வரிச் சலுகை நீக்கப்பட்டாலும் மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் இன்று (07) மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,
“கோதுமை மாவுக்கு 3 ரூபாய் சுங்க வரி இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்த 3 ரூபாயை மீண்டும் அறவிட தீர்மானித்துள்ளோம். அதற்கு முக்கிய காரணம் நெற்பயிரைக் காக்கும் பாரிய பொறுப்பும் நமக்கு உள்ளது. எமது நாட்டிற்கு அரிசியே பிரதான தேவையாகும்.
இதனால் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த காரணமும் இல்லை. ஏனெனில் டொலரின் பெறுமதி குறைந்து ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருகிறது. எனவே, அதைத்தான் நாங்கள் நிர்வகிக்க முயற்சிக்கிறோம் என்றார்.
N.S