சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான சட்டத் தகைமைகள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு ஒன்றின் தீர்ப்பு இன்று (08) அறிவிக்கப்பட்டது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க அவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என ஓஷல ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை முன்னர் தாக்கல் செய்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஓஷால ஹேரத் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், இன்று அந்தத் தீர்ப்பு பின்வருமாறு அறிவிக்கப்பட்டது.