இன்று சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பலத்த வாக்குவாதங்களின் பின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் இணங்கினார்.
6ம் திகதி கொண்டு வரப்பட்ட அவசர கால விதிகளும் 10 நாள் அவகாசத்துக்குள் சபை விவாதத்திற்கு சமர்பிக்க வலியுறுத்தப்பட்டது.
விவாதம் நடைபெறும் திகதிகள் புதன்கிழமை தீர்மானிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.